Tamil Proverbs
translated by Peter Percival
வை
3805041Tamil Proverbs — வைPeter Percival

வை.

  1. வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.
    The letter வை is both a noun and a verb.

  2. வைகறைத் துயில் எழு.
    Rise at dawn.

  3. வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.
    The river is in flood in May.

  4. வைகுண்டம் என்பது திரு மா நகரம்.
    That which is called Vaikundam is a very great city.

  5. வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.
    The current in the Vaigai is great.

  6. வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.
    When the Vaigai is in flood, its bridges do not escape uninjured.

  7. வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.
    The Vaigai is smaller than the Tamravarni.

  8. வைக்கத் தெரியாமல் வைக்கோற்போரிலே வைத்தானாம்.
    It is said that he unwittingly placed it in a stack of straw.

  9. வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?
    Having inserted it by mistake, may he ask every one that comes by to help him out of the straits?

  10. வைக்கோற்கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.
    As one embraced a straw-carrier and pretended to weep.

  11. வைக்கோற்பட்டடையில்‌ கட்டின நாய்‌
    A dog tied by a stack of straw.

  12. வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?
    Which is the more scarce, straw or a barren cow?

  13. வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும்
    A horse which eats straw will also pull down the thatch of the house.

  14. வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.
    The cow that eats straw gives a small quantity of milk but it is very sweet.

  15. வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?
    Is the horse that feeds on straw uncommonly fleet?

  16. வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.
    A reed roof lasts longer than a straw roof.

  17. வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.
    Even old straw may be of use sometime or other.

  18. வைசியரும் சூத்திரரும் இருந்து அல்லோ பிராமணரும் க்ஷத்திரியரும் வருவார்கள்.
    It is from Vaisyas and Sudras who must have existed previously, is it not, that Brahmans and Kshatris must have come.

  19. வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.
    Of the Vaisyas the agriculturists are the chief.

  20. வைசூரி வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.
    Those who are attacked with small-pox must call it the goddess.

  21. வைதாரை வாழவைக்கும் வாழ்த்தாரைத் தாழவைக்கும்.
    It will confer on calumniaters prosperity, and reduce the affluent to poverty.

  22. வைதீகர் என்றால் பார்ப்பாருக்கு பெயர்.
    The term vaidikar is another name for brahmans.

  23. வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.
    The sacred and the secular are both indispensable.

  24. வைதீகம் என்றால் தெய்வ சமயம்.
    Vaidikam means the divine religion.

  25. வைதீகம் ஆய்ந்து அறி.
    Arrive at a knowledge of religion by studious investigation.

  26. வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.
    If its being put there be true, its being lost may also be true.

  27. வைத்தது கண்டது சொல்லாதே.
    Tell not what has been kept or what you sew.

  28. வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
    If the hair is left to grow, kudumi, if shaved, bald.

  29. வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?
    Which is greater, a physician or a schoolmaster?

  30. வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.
    A physician and a schoolmaster never disagree.

  31. வைத்தியன் எல்லாருக்கும் பொது.
    A physician is common to all.

  32. வைத்தியம் வேண்டாதார் உலகில் இல்லை.
    There is no one on earth who does not require the services of a physician.

  33. வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.
    A loquacious doctor is successful.

  34. வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.
    Faith in medicine makes it effectual.

  35. வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.
    One must fear a doctor as well as a traitor.

  36. வைத்தியமோ பைத்தியமோ?
    Is it medical skill or madness?

  37. வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.
    Whatever a physician prescribes is a remedy.

  38. வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.
    It is said that a physician cannot cure himself.

  39. வைத்தியன் தகப்பன் போல.
    A physician is like a father.

  40. வைத்தியனே பெரிது என்பார் சிலர், வாத்தியே பெரிது என்பார் சிலர்.
    Some will say that a physician is greater than a schoolmaster, and others, that a teacher is greater than a physician.

  41. வைத்தியன் பாராத நோய் தீருமா?
    Can a disease be cured without treatment?

  42. வைத்தியன் பிள்ளை நோயினால் அல்ல, மருந்தினால் சாகும்.
    A doctor’s child dies, not by disease, but by medicine.

  43. வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.
    The whole town is friendly to a physician.

  44. வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வனமும் நல்லது.
    As regards medical science, surgery—in regard to age, youth are preferable.

  45. வைத்தியனே உன்னையே குணமாக்கு.
    Physician, heal thyself.

  46. வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.
    Every medical practitioner is a physician.

  47. வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.
    There is none that does not know, at least, a little of medicine.

  48. வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.
    Domestic medicine is preferable to that of a physician.

  49. வைத்தியன் பெரிதோ மருந்து பெரிதோ?
    Which is greater, a physician or his medicine?

  50. வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.
    But a fourth part of a quack’s pretensions proves to be true.

  51. வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.
    The malady of a physician cleaves to him till death.

  52. வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.
    Medical science is the most important of all sciences.

  53. வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.
    His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple.

  54. வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.
    In all the world, he who is sincere is a friend.

  55. வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.
    At the ankled feet of the giver of all good is found the refuge of the world.

  56. வையகம் ஒழியும் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.
    Earth, and heaven, will perish, but the words of the mighty will endure.

  57. வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.
    All the world do not follow the same course.

  58. வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை.
    There is no one in the world who has not uttered a falsehood.

  59. வையத்துள் நீதி செய்யத்தக்கது.
    It is proper to do justice in the world.

  60. வையத்தில் உயர்ந்தோர் சிலர் தாழ்ந்தோர் பலர்.
    In the world some are high, and many are low.

  61. வையத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.
    In the world the low are the victims of the high.

  62. வையத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள்.
    On earth those who are disappointed of salt will meet with disappointment as regards their body also.

  63. வையத்தில் உப்பில்லாத பேர்க்கு உடம்பு இல்லை.
    On earth those who have no salt have no body.

  64. வையத்தில் உடம்பு இல்லாதபேர்க்கு உப்பு வேண்டாம்.
    Those on earth who have not a body, have no occasion for salt.

  65. வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.
    While on earth salt, and a body, are indispensable.

  66. வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.
    Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.

  67. வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.
    He who lives as he ought in this world, will be ranked with the gods.

  68. வையத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும்.
    The great in the world must be distinguished by a humble mind.

  69. வையத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டது இல்லை.
    In all the world none really good, has been seen.

  70. வையத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.
    Water drawn for the rice crop, benefits the grass also.

  71. வையத்தில் நெல் அரிசி வேண்டாதாரும் உண்டு, புல் அரிசி சிக்காதாரும் உண்டு.
    In the world there are those who do not care for rice, as well as those who can scarcely procure even the reeds of grass.

  72. வையத்தில் சைவனுக்குச் சைவன்மேல்.
    As a rule one saiva regards himself superior to another.

  73. வையத்தில் வைஷ்ணவனுக்கு வைஷ்ணவன் மேல்.
    One vaishnava thinks himself superior to another vaishnava.

  74. வையத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.
    On earth a mother is more serviceable than a father.

  75. வையத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.
    While on earth the things which do not cloy, are rice and water.

  76. வையத்தில் நல் வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா?
    May that which cannot be accomplished by good deeds, be accomplished by evil deeds?

  77. வையத்து மனிதர் நாலு வகை.
    There are four kinds of men in the world.

  78. வையம் தோறும் தெய்வம் தொழு.
    Worship God through all the world.

  79. வையம் ஏற்றின் ஐயம் இல்லை.
    When the whole world applauds one, his merit is unquestionable.

  80. வையம் ஒத்தால் ஐயம் இல்லை.
    If the world agree, there is no question about the matter.

  81. வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.
    When the whole world praise one, his character is unimpeachable.

  82. வையம் பெரிதானாலும் வளம் உள்ள இடம் கொஞ்சம்.
    Though the earth is of vast extent, the space adapted to the wants of man is limited.

  83. வையம் பெரிது அதில் வருத்தமும் பெரிது.
    The world is great, and its anxieties are also great.

  84. வையம் கெட்டால் ஐயம் இல்லை.
    If the world be destroyed, almsgiving will cease.

  85. வைய வைய வைரக்கல், திட்டத் திட்டத் திண்டுக்கல்.
    The more abused the more durable, the more despised the more hardened.

  86. வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.
    A diamond must be cut with a diamond.

  87. வைரம் மனதில் வையாதே.
    Harbour not malice.

  88. வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான்.
    He who purchases diamonds will die by swallowing the particles.

  89. வைராக்கிய சதகம் சதகங்களில் விசேஷம்.
    The most distinguished of satakams is that on self control.
    A satakam is a poem of a hundred stanzas.

  90. வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.
    Malice is of all forms of hatred the most pernicious.

  91. வைவார்க்கு இன்பம் இல்லை, பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை.
    The abusive have no happiness the forbearing, have no misery.

  92. வைராவி துறவிகளில் விசேஷம்.
    Among ascetics the vairávi is the most distinguished.