This page has been proofread, but needs to be validated.
288
பழமொழி.
  1. சட்டி சுட்டதும் கை விட்டதும்.
    The chatty burnt, the hand left it.

  2. சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
    Can a ladle appreciate the flavour of curry?

  3. சணப்பன் வீட்டுக் கோழி, தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.
    As a flax-dresser’s fowl fettered itself.

  4. சணம் பித்தம் சணம் வாதம்.
    One moment he is bilious and the next rheumatic.

  5. சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.
    Like dry leaves before a strong wind.

  6. சண்டிக்கு ஏற்ற மிண்டன்.
    A stubborn person well suited to the self-willed.

  7. சண்டை முகத்திலே உறவா?
    Is relationship recognised in a battle field?

  8. சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவாள்.
    She will call him Annamalai the gormandizer.

  9. சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறதுபோல.
    Like asking one in a crowd, if the bald headed devotee has been seen.

  10. சதுரக்கள்ளியில் அகில் உண்டாகும்.
    The eaglewood-acquilla grows with the prickly pear.

  11. சதைக் கண்டு கத்தி நாடவேண்டும்.
    The surgeon's knife must be judiciously applied.