This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
289
  1. சதை இல்லாமற் கத்தி நாடுமா?
    Will the knife operate where there is no flesh?

  2. சதை உள்ள இடத்திலே கத்தி நாடும்.
    The surgeon’s knife seeks the fleshy parts.

  3. சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.
    As if seven clouds simultaneously rained fire.

  4. சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பணையா?
    Is the order of the Naidu required in order to procure gruel at the choultry?

  5. சத்திரத்துப் பாட்டுக்குத் திருப்பாட்டு மேலா?
    Is a divine hymn superior to that sung in a choultry?

  6. சத்திரத்திலே போசனம், மடத்திலே நித்திரை
    Eating in a choultry and sleeping in a monastery.

  7. சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது.
    To say God is the witness of what one testifies, is the highest of all forms of oath.

  8. சத்தியத்திற்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டப்போது அழப்போகிறதா?
    Will the child that has no regard for truth go to weep with one when in sorrow?

  9. சத்தியம் நன்னிலை, சாவைத் தினம் நினை.
    Truthfulness is the best condition, daily think of death.

  10. சத்தியமே வெல்லும் அசத்தியமே கொல்லும்.
    Truth prevails, falsehood kills.

  11. சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.
    Truth kills falsehood, truth prevails.

  12. சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.
    The truthful man has all other virtues.