This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
505
  1. மூலிகை அறிந்தால் மூன்று உலகமும் ஆளலாம்.
    He who is acquainted with botany may govern the three worlds.

  2. மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.
    It will be clear if you loose the third knot.

  3. மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.
    A cloth of thirty cubits is put on with as much ease as one of three cubits.

  4. மூன்று வீட்டுக்கு முக்காலி நான்கு வீட்டுக்கு நாற்காலி.
    A three legged seat to three houses, and four legged seat, to four houses.

  5. மூன்று பெயர் வழிக்குத் துணை, இரண்டு பெயர் பிணையல் மாடு, ஒருவன் போனால் பரதேசி.
    Three may help one another on the way, two are like a yoke of oxen, one is like a pilgrim.

  6. மூன்று பொருளையும் தேடு முதிர்வயதில் ஊன்றுகோல் ஆகும்.
    Secure the three things virtue, wealth and happiness, they will serve as a staff in old age.

  7. மூன்றே முக்கால் நாழிகைக்குள் முத்து மழை பெய்தது, வாரி எடுக்கும்முன்னே மண்மாரி பெய்தது.
    It rained pearls for three and three fourths of a náligai, but before they could be gathered it rained earth.

மெ.

  1. மெத்தப் படித்தவருக்கு சோறு வெல்லம்.
    To the profoundly learned rice is sugar.

  2. மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.
    He who is very learned, is a fool.

  3. மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.
    Externally sympathising, internally envying.