This page has been proofread, but needs to be validated.
506
பழமொழி.
  1. மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.
    A soft bed is favourable to sleep.

  2. மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.
    Shining with truth, burning with lies.

  3. மெய் சொல்லி வாழாதான், பொய் சொல்லி வாழ்வானா?
    Will he who cannot prosper by truth, prosper by falshood?

  4. மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.
    Honest occupation always secures substantial results.

  5. மெய்ப்பொருள் கல்வியே கைப்பொருள்.
    Learning is real wealth.

  6. மெய் மூன்றாம் பிறை, பாெய் பூரண சந்திரன்
    Truth is the crescent of the third day, falsehood is the full moon.

  7. மெய்மை சாற்ற வையம் ஏற்றும்.
    When you speak truth, the world will honour you.

  8. மெய்யது நன்றி இடும்.
    Truth is beneficial.

  9. மெய்யான சத்தியன் வேதவாசகன்.
    He is the truthful man who knows the vedas.

  10. மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே.
    Truth in one who cannot speak easily, may appear like falsehood.

  11. மெலிந்தவளுக்கு மெத்தப் பெலன், மேனி மினுக்கு இட்டவளுக்கு மெத்தக் கசம்.
    A lean woman is strong, a gaudy woman is consumptive.

  12. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.
    Gently flowing water will hollow even a rock.

  13. மெல்லியாடோள் சேர்.
    Live with your wife.