Tamil Proverbs
translated by Peter Percival
சீ
3772213Tamil Proverbs — சீPeter Percival

சீ.

  1. சீ என்ற வீட்டிலே பேயும் நுழையாது.
    Even a demon will not enter a house that has pooh-poohed him.

  2. சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?
    Will a dog enter a jungle that is looked down upon?

  3. சீக்கிர புத்தி பல ஈனம்.
    A hasty mind is feeble.

  4. சீட்டாளுக்கு ஒரு முட்டாள் செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரனா?
    Does a letter-carrier, require a helper, or a shoeboy employ one to carry his betel pouch?

  5. சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்.
    The birth of Sita was the ruin of Lanka.

  6. சீபுரத்துப் பள்ளி செத்தும் கெட்டான் இருந்தும் கெட்டான்.
    A Palli of Sípuram is ruined when dead, as well as when alive.

  7. சீப்பு எடுத்து வைத்தால் கலியாணம் நிற்குமா?
    If the comb be concealed, will the marriage ceremony be delayed?

  8. சீரங்கத்துக் காகமானாலும் கோவிந்தம் பாடுமா?
    Though hatched at Shrirangam, will a crow sing the praises of Govinda?

  9. சீரங்கத்துக்குப் போகிறவன், வழியிலே பாரியைப் பறிகொடுத்ததுபோல.
    As a man lost his wife on his way to Shrirangam.

  10. சீரங்கத்தில் உலக்கை கொடுத்ததுபோல.
    As a pestle was given at Shrirangam.

  11. சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டதுபோல.
    As one going to the shrine of Shrirangam concealed an old jackal in his bosom.

  12. சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.
    Fine gold in the hands of the unthrifty is of no value.

  13. சீரியர் கெட்டாலும் சீரியரே.
    Though reduced to poverty, the virtuous are still virtuous.

  14. சீரியருக்கு அன்பு செய்.
    Be kind to the virtuous.

  15. சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?
    Will a ragged cloth go to Ceylon to tie up sugar?

  16. சீவனம் செய்ய நாவினை விற்கேல்.
    Do not make merchandise of your tongue for a livelihood.

  17. சீவன் போனால் கீர்த்தியும் போமா?
    Will fame go when life goes?

  18. சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
    If you write the word sugar and lick it, will it taste sweet?