Tamil Proverbs
translated by Peter Percival
சூ
3772216Tamil Proverbs — சூPeter Percival

சூ.

  1. சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.
    A burnt cat shuns the fire-place.

  2. சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?
    Is it proper to tie the mouth of the ox that treads out the corn?

  3. சூட்சத்திலே இருக்கிறது மோட்சம்.
    Important ends are attained by comparatively insignificant means.

  4. சூட்சாதி சூட்சத் துல்லிபன்.
    The great contriver who is inscrutable.

  5. சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.
    Know the efficacy of mercury by the glow of health on the cheeks.

  6. சூதனுக்கு நீதி இல்லை.
    The cheat is void of justice.

  7. சூதன் கொல்லையிலேதான் மாடு மேயும்..
    The ox will graze in the field of the intriguing.

  8. சூதானத்துக்கு அழிவு இல்லை.
    Circumspection leads not to ruin.

  9. சூதினால் வெல்வது எளிது.
    It is easy to overcome an enemy by intrigue.

  10. சூதும் வாதும் வேதனை செய்யும்.
    Gambling and boasting end in sorrow.

  11. சூது விரும்பேல்.
    Desire not gambling.

  12. சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
    A stringed brahman observes the shasters.

  13. சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.
    He dances like a puppet.

  14. சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.
    All under the sun is vanity.

  15. சூரியனைக் கையால் மறைத்ததுபோல்.
    Like hiding the sun with the hand.

  16. சூரியனைக் கண்ட இருள் கபோல்.
    Like darkness that has seen the sun.

  17. சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்
    It will vanish as the dew before the sun.

  18. சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.
    Like a fire-fly before the sun.

  19. சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.
    The earth is illumined by the sun.

  20. சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.
    Saturn has seized thee as the eclipse seizes the sun.

  21. சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
    Form your plans before sunrise.

  22. சூரியனுடைய பிரகாசத்துக்குமுன்னே மின்மினி விளங்கமாட்டாது.
    Fire-flies do not shine in the presence of the sun.

  23. சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.
    As the dog barked at the sun.

  24. சூரியனைக் கல்லால் அடித்ததுபோல.
    Like striking the sun with a stone.

  25. சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .
    Like chula fish kissing each other.

  26. சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா?
    Do you eat up the rice yourself on the plea of pregnancy, and put earth into the mouth of the barren?

  27. சூழ ஓடியும் வாயிலாலே.
    Though you run round, you will have to enter by the gate.