Tamil Proverbs
translated by Peter Percival
தீ
3770475Tamil Proverbs — தீPeter Percival

தீ.

  1. தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.
    Act as one who warms himself-do not burn yourself.

  2. தீக்குக் காற்று உதவியானதுபோல.
    As the wind assists fire.

  3. தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.
    The notes of the kuyil bird to the sugar-cane-bowed Cupid.

  4. தீட்டின மரத்தில் கூர்பார்க்கிறதா?
    Is the sharpness of the sword to be tried on the whetting board?

  5. தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.
    He who abstains from evil deeds is God.

  6. தீபத்தில் ஏற்றிய தீவட்டி.
    A torch lit at a lamp.

  7. தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
    Is there a lack of charred wood in a house on fire?

  8. தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது.
    A burn is curable, but a wound occasioned by slander is not.

  9. தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.
    Though fire may be in excess, hatred may not.

  10. தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
    He who approves evil is guilty of it.

  11. தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்யனவும் தீது.
    To associate with the wicked is bad, to serve the wicked is also bad.

  12. தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
    He who liberates the wicked injures the innocent.

  13. தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
    The thoroughly learned may become a religious guide.

  14. தீராக் கோபம் பாடாய் முடியும்.
    Unrestrained anger will end in mischief.

  15. தீராச் கோபம் போராய் முடியும்.
    Unrestrained anger ends in strife.

  16. தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.
    Continued uncertainty leads to war.

  17. தீராச் செய்கை சீராகாது.
    An unsettled affair is bad.

  18. தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
    God himself is the witness of the unquiet mind.

  19. தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
    God is the witness in an undecided cause.

  20. தீரா வழக்கு நேராகாது.
    An intricate case will never end satisfactorily.

  21. தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.
    A demon does evil to him who does evil to others.