Tamil Proverbs
translated by Peter Percival
து
3771098Tamil Proverbs — துPeter Percival

து.

  1. துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு?
    Why additional pain to a mind already in grief?

  2. துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.
    He that is addicted to sleep loses his appetite.

  3. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
    Unsympathizing wives are like fire in the bosom.

  4. துடுப்பு இருக்க கை வேவானேன்?.
    Why should the hand be burnt when there is a ladle?

  5. துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.
    Like tying a silk tassel to a broomstick.

  6. துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம்.
    To the wicked, punishment, to the good, protection.

  7. துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்
    The people of the village will reprove a wicked child.

  8. துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும் துலுக்கக்குட்டி மாத்திரம் ஆகாது.
    Though girls may be had at a pie a head, a Muhammadan girl is undesirable.

  9. துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.
    An impudent woman has no shame, a weeping woman has no sorrow.

  10. துணிந்தார்க்குத் துக்கம் உண்டா? பணிந்தார்க்குப் பாடு உண்டா?
    Do the adventurous experience grief, or the humble, distress?

  11. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை, அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
    The adventurous know not sorrow, the sorrowful know not anger.

  12. துணைபோனாலும் பிணைபோகாதே.
    Though you may bear one company, do not become his security.

  13. துணையோடல்லது வழிபோகாதே.
    Do not go on a journey without a companion.

  14. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல.
    As a cannon was born of a musket.

  15. தும்பர் அம்பலம்.
    The wicked will be abandoned.

  16. துயரப்பட்டால் ஆறுதல் உண்டு, துன்பப்பட்டால் தேறுதல் உண்டு.
    Grief leads to comfort, suffering to patience.

  17. துரியோதனன் குடிக்குச் சகுனிபோல.
    Like Saguni to the family of Duryodhana.
    Saguni was the maternal uncle of Duriyodhana, and had, like the latter, ninety-nine brothers. Duriyodhana was one of the kings whose exploits are narrated in the Epic Mahabharata. He imprisoned Saguni and his ninety-nine brothers. to prevent their combination against him, feeding them on gruel which was doled out from day to day. They all died of inanition excepting Saguni, who managed to secure sufficient nourishment to preserve his life. He afterwards became the counsellor of Duriyodhana and from sinister motives gave such advice as led to the ruin of his royal master, who lost his kingdom and also his ninety-nine brothers.

  18. துருக்க தெருவிலே திருவெம்பாவையா ஓதுகிறது?
    Is it in a Muhammadan street that one should recite Tiruvemba?

  19. துரும்பும் கலத்தண்ணீர் தேக்கும்.
    Even a fibre may help to fill up a kalam with water.

  20. துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையைக் கட்டுவான்.
    If he find room for the insertion of a straw, he will tie an elephant.

  21. துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும்.
    Anger occasioned by a trifle may extend to the sky before it ceases.

  22. துரும்பு தூண் ஆனால் தூண் எவ்வளவு ஆக வேண்டும்?
    If a straw become a pillar, how great the pillar must be?

  23. துரும்பைத் தூணாக்குகிறதா?
    What, do you make a pillar of a straw?

  24. துரை சித்தம் கன சித்தம்.
    The will of the ruler is weighty.

  25. துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.
    Power obtained by high treason, a sceptre that oppresses the subject.

  26. துரோபதையைத் துகில் உரிந்ததுபோல.
    Like stripping off the cloth of Draupati.
    Draupati was the common wife of the five sons of Pandu. When in captivity after the humiliation of the Pandavas, an attempt was made by Duriyodhana to strip off her cloth, as a punishment for laughing at him when he stumbled, she was however saved from dishonour, for as they drew away her cloth it was lengthned by divine interposition.

  27. துர்ச்சனனைக் கண்டால் தூர நில்.
    Stand at a distance from the wicked.

  28. துலக்காத ஆயுதம் துருப் பிடிக்கும்.
    A weapon not kept polished, will become rusty.

  29. துலாத்தில் வெள்ளி இருப்பதினால் உலாவிப் பெய்யும் மழை.
    Venus being in Libra, there will be rain throughout the country.

  30. துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.
    Like singing Dévaram in a Muhammadan street.

  31. துவிநாக்கு இடறும்.
    A double tongue will slip.

  32. துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.
    Kanji requires continued stirring while boiling, and marriage requires careful consideration before being entered on.

  33. துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.
    The fragrance of the Tulasi and the point of a thorn are in the bud.

  34. துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.
    Dwarf, do not jump, there is a ditch close by.

  35. துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.
    Do not leap about O lamb, the butcher's knife is in my hand.

  36. துள்ளின மாடு பொதி சுமக்கும்.
    The restive or unruly bullock will carry its load.

  37. துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.
    Though one may exert himself to the utmost, he cannot procure even a silver fanam when fortune does not smile.

  38. துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.
    By restlessness thou wilt throw thyself headlong.

  39. துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.
    The springing young deer fell into a well.

  40. துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
    Can that which is not reached by a long pole be seized by the hand?

  41. துறவறம் இல்லறம் மனதிலே.
    Ascetic and domestic virtues originate in the heart.

  42. துறவிக்கு வேந்தன் துரும்பு.
    A king is but a straw before an ascetic.

  43. துன்பம் தருகிற காக்கையினது சத்தத்தினால் அதை விரட்டுவார்கள், இன்பம் தருகின்ற குயிலை விரட்டார்கள்.
    Men scare away crows because their cries are a nuisance, cuckoos they do not scare away.

  44. துன்பத்திற்கு இடம் கொடேல்.
    Take care to keep off sickness.

  45. துன்பம் முந்தி இன்பம் பிந்தி.
    Pain precedes, pleasure follows.