Tamil Proverbs
translated by Peter Percival
தை
3764680Tamil Proverbs — தைPeter Percival

தை.

  1. தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.
    There is no grass that does not grow in January, nor tree that does not sprout in February.

  2. தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே?
    Whilst one gate is blocked up, and the other defended by artillery, O Uppanár how did you find your way in?

  3. தை பிறந்தால் வழி பிறக்கும்.
    If January come, roads come.

  4. தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.
    Like holding the lath as each nail is fastened.

  5. தையலும் இல்லான் மையலும் இல்லான்.
    One who has neither wife, nor desire to marry.

  6. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
    In January and February sleep under thatch.
    Because dew is then excessive.