Tamil Proverbs
translated by Peter Percival
தொ
3764681Tamil Proverbs — தொPeter Percival

தொ.

  1. தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.
    When together friends, if separated enemies.

  2. தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.
    A child that can walk, is as Yama to a child in the cradle.

  3. தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.
    The demon of a wizard pursues one to the burning ground.

  4. தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.
    She rocks the cradle and pinches the child.

  5. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
    Habits contracted in the cradle cleave to one till he goes to the burning ground.

  6. தொட்டுக் காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது.
    Without a preceptor an art cannot be attained.

  7. தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.
    He is the friend of his servants who helps them.

  8. தொண்டெனப்படேல்.
    Be not called a slave.

  9. தொண்ணூறு கடனோடே துவரம்பருப்புக் காற் பணம்.
    With ninety debts, beans for a quarter of a fanam.

  10. தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
    With ninety gold fanams, one for beans.

  11. தொத்துக்குத் தொத்துச் சாட்சி துவரம்பருப்புக்கு மத்தே சாட்சி.
    A slave is a witness for a slave, a churn-staff is a witness for beans-cytisus cajan.

  12. தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.
    The food earned by the plough is sweeter than that obtained by serving others.

  13. தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமற் போமா?
    When sheep are penned, will not dung be found in the fold?

  14. தொன்மை நாடி நன்மை விடாதே.
    In your zeal for old forms neglect not what is really useful,

  15. தொன்மை மறவேல்.
    Forget not your former condition.

  16. தொன்னிலம் முழுதும் தோன்றிய கல்வி.
    Learning which is conspicuous to the whole world.