Tamil Proverbs
translated by Peter Percival
பு
3768391Tamil Proverbs — புPeter Percival

பு.

  1. புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.
    That which was given to the praise-worthy, is a microscope.

  2. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
    Defend those who acknowledge your merit.

  3. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.
    Though eaglewood produces smoke, it will do no harm.

  4. புங்கப்புகழே தங்கத்திகழே.
    The contempt of riches is the highest praise.

  5. புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.
    As a demon came out of a well that had been dug as an act of religious merit.

  6. புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.
    Like looking at the teeth of a bullock that is ploughing for nothing.

  7. புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.
    It is said that evil followed the man who attempted a kind act.

  8. புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.
    A leader not virtuous is worthless.

  9. புண்ணிலே கோல் இட்டதுபோல.
    Like thrusting a stick into a wound.

  10. புண்ணிலே புளி பட்டதுபோலே.
    As if a sore had become acidified.

  11. புண்ணுக்கோ மருந்துக்கோ வீசம்.
    Whether calls for immediate action, the sore or its remedy?

  12. புதிய காரியங்களிற் புதிய யோசனை வேண்டும்.
    New things require fresh consideration.

  13. புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.
    Employ a new washerman, but an old barber.

  14. புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.
    A new washerman will wash with great care.

  15. புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?
    Is it right to forsake old friends in reliance on new ones?

  16. புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.
    Water poured into a new pot.

  17. புதுப் பானைக்கு ஈ சேராது.
    Flies do not swarm on a new pot.

  18. புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நெருப்பு எடுத்துவா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்பு அடி.
    O bride, O bride bring some fire, what awaits you is slippering.

  19. புதுமையான காரியம் தான் இந்தக் கலியுகத்தில்.
    Certainly it is a strange occurrence in kaliyuga.

  20. புதுமைக்கு வண்ணான் பறை தட்டி வெளுத்தான்.
    The washerman inaugurated his washing by beat of tomtom.

  21. புதையல் எடுத்தவனைப்போலே.
    Like one that has discovered buried treasure.

  22. புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.
    A foolish king and an ignorant minister.

  23. புத்தி அற்றோரும் தூங்கினர், புத்தி உற்றோரும் தூங்கினர்.
    Both the foolish and the wise slept.

  24. புத்திமான் பலவான்.
    An intelligent man is strong.

  25. புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.
    There is nothing in which the mature in judgment fail.

  26. புத்தி உறப் புகழ்.
    As soundness of judgment increases, praise will follow.

  27. புத்தி அற்றவர்கள் பத்தியாய்ச் செய்வதும் விபரீதமாம்.
    Even that which fools perform earnestly is wrong.

  28. புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.
    When the foolish go to wash, they will daub themselves with mud.

  29. புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.
    Even when kicked about and rolling in the dust, he affirms that his mustache did not touch the earth.

  30. புருஷன் அடிக்கக் கொழுந்தன் கோபித்ததுபோல.
    Like the younger brother of the husband, rebuking him for beating his wife.

  31. புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.
    The cloth covering the breast suited to the rank of her husband.

  32. புருவத்திற் பட்டால் கரிக்குமோ கண்ணிற் பட்டால் கரிக்குமோ?
    When does acid cause smarting, when it is applied to the eye-brow or the eyes?

  33. புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்.
    Struck with fear before struck by the tiger.

  34. புலிக்குப் பிறந்து நகம் இல்லாமற் போகுமா?
    Being born a tiger, will it be without claws?

  35. புலிக்குத் தன் காடு என்ன வேற்றுக்காடு என்ன?
    What matters it to the tiger whether he is in his native jungle or another?

  36. புலிக்குப் பிறந்து பூனையாய்ப்போகுமா?
    Being born a tiger, will it become a cat?

  37. புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டதுபோல.
    As the deer was caught among tigers.

  38. புலி செவி திருகிய மத களிறு.
    An elephant in rut whose ears were wrung off by a tiger.

  39. புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம்
    Though one may escape the claws of the tiger, even the pricking of its whiskers will prove malignant.

  40. புலி் பசித்தால் புல்லுத் தின்னுமா?
    When the tiger is hungry, will he eat grass?

  41. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு இடம்.
    The crouching of the tiger is the prelude to a spring.

  42. புலிப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்.
    He is like one fed on tiger’s milk.

  43. புலியைப் பார்த்து நரி் சூடு இட்டுக் கொண்டதுபோல்.
    As the jackal branded itself in imitation of the stripes of a tiger.

  44. புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.
    The base do not talk decently, nor do they heed oaths.

  45. புலையும் கொலையும் களவும் தவிர்.
    Avoid lies, murder and theft.

  46. புல் உள்ள இடத்தில் மாட்டை ஆட்டை மேய ஒட்டாது.
    It will not allow either sheep or cows to graze where there is grass.

  47. புல்லும் பூமியும் உள்ளமட்டும்
    As long as vegetation and the earth exist.

  48. புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ளமட்டும்.
    As long as vegetation, earth, rocks and the Cauvery exist.

  49. புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது.
    Selling flowers in a grass market.

  50. புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?
    Will the red dog that eats tiger's flesh prove as useful as the cow that eats grass?

  51. புழுக்கை கலம் கழுவி தின்னாது.
    The low-born does not eat from a washed plate.

  52. புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?
    Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?

  53. புழுக்கை ஒழுக்கம் அறியாது பித்தளை நாற்றம் அறியாது.
    Menials are ignorant of manners, brass is unconscious of its ill odour.

  54. புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.
    The sensibility of menials is in the neck.

  55. புழுங்கிப் புழுங்கிப் மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.
    Though the slave girl who pounds rice labours so as to perspire, her share is only a cake.

  56. புழுத்த சரக்குக்குக் கொழுத்த பணம்.
    Fat money for rotten articles.

  57. புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.
    He who has climbed a tamarind tree will come down when his teeth are set on edge.

  58. புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?
    Do you come to infuse acidity into the tamarind fruit?

  59. புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.
    Even when boasting do it so as to secure belief.

  60. புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?
    Is a practical arithmetician fit to teach the theory of arithmetic?

  61. புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.
    The medicinal plant in the backyard will not avail in an emergency.

  62. புறக்குடத்துத் தண்ணீர்போல.
    Like water on the outside of a pot.

  63. புற்றிலே ஆந்தை விழிப்பதுபோல.
    Blinking like an owl on an ant-hill.

  64. புற்றிலே ஈசல் புறப்பட்டதுபோல.
    Coming forth like a swarm of winged white ants from an ant-hill.

  65. புற்றிலே கிடந்த புடையன் எழுப்பினதுபோல.
    Rushing as a beaver snake from its hole.

  66. புற்றிலே ஈசல் புறப்பட்டாலும், மண்ணிலே கறையான் கட்டினாலும் மழை வரவே வரும்.
    When winged white ants issue out of a hole, and white ants swarm, it will certainly rain.