3768724Tamil Proverbs — மPeter Percival

ம.

  1. மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது.
    When butted by a ram of Mahadévar, even the demon shakes its head.

  2. மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்.
    The mother, having given advice to her daughter, played the harlot.

  3. மகள் செத்தாள் தாய் திக்கு அற்றாள்.
    The daughter is dead, the mother is become destitute.

  4. மகள் செத்தாற் பிணம் செத்தாற் சவம்.
    If the daughter die her remains are regarded as a pinam; if the son, his corpse is a savam.

  5. மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும்.
    No matter if my son should die, it will suffice if the arrogance of my daughter-in-law is checked.

  6. மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.
    Mahámaham festival is celebrated every twelfth year.

  7. மகா மேருவைச் சேர்ந்த நாகமும் பொன்னிறமாம்.
    Even a crow if it arrive at Maháméru is said to assume a golden hue.

  8. மகா ராஜாவின் கலியாணத்தில் நீராகாரம் நெய் பட்ட பாடு.
    At the marriage feast of the Maha Rajah, even cold rice water is rare as ghee.

  9. மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.
    As Maha Lakshmi went on a pilgrimage.

  10. மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி.
    Illustrious beauty, leave the door ajar.

  11. மகிமைக்கு அஞ்சிய மருமகனே எருமைக் கன்றைக் கொல்லாதே.
    Thou modest son-in-law, do not kill the young buffaloa.
    This was said to a man by his mother-in-law. Wishing to appear to her a small eater he stinted himself at his ordinary meals, and yet appeared to flourish. Casting about for a solution of the mystery her attention was called to the ill condition of a young buffaloa. Suspecting that her son-in-law was the cause of this, she resolved to watch his movements. The following night she saw him emerge from his room and proceed to the buffaloa, whose milk he exhausted, and returned to his own quarters. On the morrow when he took his food she addressed him in the language of the proverb.

  12. மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.
    Death to the distinguished, homage to the cowherd.

  13. மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.
    One matron flourishes in the water-lily, and one weeps bereft of her marriage symbol.

  14. மக்கள் களவும் வரகு பதரும் சரி.
    The dishonest tricks of children, and the husks of varagu are alike.

  15. மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.
    To be fed by children is a disgrace to parents.

  16. மக்காவுக்குப் போய் கொக்கு பிடித்ததுபோல.
    Like going on a pilgrimage to Mecca, and catching a crane.

  17. மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.
    Montgomery came, and it rained fine gold.

  18. மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளியங்காய்.
    In time of scarcity, mangoes, and in a season of plenty, tamarind fruit, are abundant.

  19. மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள் கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
    If the damsel is polluted she may be cleansed by the ganges, but if the ganges be polluted whither can she go?

  20. மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?
    If such be the condition of the young fish, what will be that of the mother?

  21. மச்சானைப் பார்க்க உறவும் இல்லை, மயிரைப் பார்க்க கறுப்பும் இல்லை.
    No friendship superior to that of a cousin, nothing blacker than hair.
    The word மச்சான் is used for a brother-in-law, and also for a maternal uncle’s son.

  22. மச்சான் செத்தால் மயிறு போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.
    If my brother-in-law die I care not a hair, his cumbly mattress will be mine.

  23. மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது.
    If the roof be destroyed, the house will not answer for a hut.

  24. மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சகத்தில் நினைப்பதே போதகம்.
    Though one may not worship god by bathing him, and scattering flowers on him, we are taught to keep him in mind.

  25. மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.
    A prudent youth is superior to a stupid old man.

  26. மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.
    A stupid question needs no answer.

  27. மடப் பெருமையே தவிர நீராகாரத்திற்கும் வழி இல்லை.
    Besides a choultry, there is nothing,—not even water.

  28. மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்திக்கு வழி எங்கே என்கிறான்.
    After the choultry has been destroyed, he asks the way to the flower garden.

  29. மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?
    Are you about to behead one upon whom you have forced mango fruit?

  30. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
    If you have money in your waist-cloth, you may be afraid on the way.

  31. மடியைப் பிடித்து கள்ளை வார்த்து மயிரைப் பிடித்து காசு வேண்டுகிறதா?
    Having forced one to take toddy, do you seize him by the hair and demand payment?

  32. மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
    Moderation in eating exhilerates the mind.

  33. மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?
    Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?

  34. மட்டு இல்லாமற் கொடுத்தாலும் திட்டுக் கேட்கல் ஆகாது.
    Though he gives liberally, it is not right to hear his abuse.

  35. மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.
    Palm-stem charcoal and Madappallis are not to be trusted.

  36. மணலின்மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும்; அதுபோல, பொல்லாதவர்களுக்குச் செய்த உபகாரம் மறைந்துபோம்.
    Drops of rain falling on sand will instantly disappear, in like manner favours shewn to the wicked will be soon forgotten.

  37. மணற் சோற்றில் கல் ஆய்வதுபோல.
    Like picking out stones when eating a dish of sand.

  38. மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.
    So to govern a kingdom as not to move even the tongue of a bell.

  39. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    May one descend into a river relying on a mud horse?

  40. மண்டைக்குத் தகுந்த கொண்டை போடவேண்டும்.
    The knot of hair must be proportioned to the size of the head.

  41. மண்டையில் எழுதி மயிரால் மறைத்ததுபோல.
    Like writing on the skull and covering it with the hair.

  42. மண்டை உள்ளவரையில் சளி போகாது.
    As long as the head remains phlegm will abide.

  43. மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.
    They may have house and grounds who know how to take care of them.

  44. மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.
    Dried cow-dung is the proper form of wedding cake, when the bridegroom is made of sand.

  45. மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.
    Made of earth, thou art earthy.

  46. மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.
    Whilst on earth pervert not judgment, in the case of a woman.

  47. மண்ணைத் தின்றாலும் மறையத் தின்.
    Though what you may eat be sand, eat it in a secluded place.

  48. மண்ணோடே பிறக்கலாம் உன்னோடே பிறந்ததில்.
    It were better to be born of the earth, than to be your brother.

  49. மண் பறித்து உண்ணேல்.
    Do not live by extortion.

  50. மண்பிள்ளை ஆனாலும் தன் பிள்ளை.
    Though earthen, one’s own child is precious.

  51. மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.
    Though the cat is made of mud, if it catch rats, it is enough.

  52. மண்வெட்டி கூதல் அறியுமா?
    Is a hoe sensible of cold?

  53. மண்வேலையோ புண்வேலையோ?
    Are you engaged in making earthen ware, or sores?

  54. மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.
    A child has neither the power of singing nor discretion.

  55. மதன மலைக்கு ஒப்பிடலாம்.
    He is comparable to Mathana mountain.

  56. மதாபிமானம் சுசாதிமானம் தேசாபிமானம்.
    Love of father, caste, and country.

  57. மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.
    It is not well to tread even on the threshold of a house in which you are not respected.

  58. மதியும் உமது விதியும் உமது.
    Thy purpose and thy destiny.
    The settled judgment, and the decrees of God, are in harmony.

  59. மதியை மீன் சூழ்ந்ததுபோல.
    As the stars surround the moon.

  60. மதில்மேல் இருக்கிற பூனைபோல் இருக்கிறான்.
    He is like a cat on a wall.
    Spoken of one who makes the most of his position.

  61. மது பிந்து கலகம்போல் இருக்கிறது.
    Like the uproar of a honey drop.

  62. மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.
    The way to Madura is in the mouth.

  63. மந்திரம் கால் மதி முக்கால்.
    The incantation is one fourth, and common sense three fourths.

  64. மந்திரத்தில் மாங்காய் விழுமா?
    Will mangoes fall by a charm?

  65. மந்திரம் இல்லான் பூசை அந்தி படுமளவும்.
    Religious ceremonies not regulated by a form, will continue till sun-set.

  66. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
    It is the attribute of a minister to foretell things likely to occur.

  67. மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லாச் சேனையும் கெடும்.
    Decisions without councillors, and troops without arms, will perish.

  68. மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?
    Do you expect milk in the fold, and curds at home?

  69. மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.
    The damsel who has a fine head of hair, combs and dresses it.

  70. மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.
    Friendship so close that a hair cannot be introdued between the parties, will be destroyed if money matters interpose.

  71. மயிர் சுட்டுக் கரியாகிறதா?
    Can charcoal be formed by burning hair?

  72. மயிர் பிளக்க வகைதேடினாற்போல.
    Like seeking means to split a hair.

  73. மயிலாப்பூர் ஏரி உடைத்துப்போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு ஆகட்டும் என்றாற்போல.
    Like saying it may be deferred to the next committee, on hearing that the Mylapore tank has given way.

  74. மயிலே மயிலே என்றால் இறகு கொடுக்குமா?
    If you exclaim O peacock, O peacock, will it give you its feathers?

  75. மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.
    The peacock-eyed bride is phrensied, her bridegroom is in anguish.

  76. மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.
    Be more afraid of a vicious course than of death.

  77. மரணத்திற்கு வழி மட்டில்லை.
    There are endless ways that lead to death.

  78. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்ததுபோல.
    As an ox trampled under foot a man that had fallen from a tree.

  79. மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும்.
    The fruit of a tree will fall at its foot.

  80. மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும்.
    Leaves cover a tree, money covers one’s nakedness.

  81. மரநாயிலே புழுகு வழிக்கலாமா?
    Can you obtain musk from a polecat?

  82. மரம் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கும்.
    The tree affords shade to the man who is felling it.

  83. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
    The tree affords shade to him who fells it, the earth supports him who digs it.

  84. மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
    He who let go his hold after climbing a tree, and he who borrowed money to lend, came to grief.

  85. மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
    He who planted the tree will water it.

  86. மரியாதை இல்லாதான் மகிமை அற்றான்.
    He who was not respectful lost his reputation.

  87. மரியாள் குடித்தனம் சரியாய்ப்போச்சு.
    Mary’s domestic life has come to an end.

  88. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
    To a gloomy eye all obscure things are demons.

  89. மருத்து மாவுக்குச் சயிக்கினை, மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.
    A sign to a fleet horse, whipping to an obstinate one.

  90. மருந்து கால் மதி முக்கால்.
    Medicine one fourth, common sense three fourths.

  91. மருந்தும் விருந்தும் மூன்று நாள்.
    Three days for testing a medicine, and for a feast.

  92. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
    Though the quantity be little, like medicine, distribute before eating it.

  93. மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.
    It is said that what she cooked for her son-in-law she gave to her son, and was distressed about it.

  94. மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக்கொண்டதுபோல.
    Like remembering, when hungry, the food of the marriage feast.

  95. மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?
    Does the barren woman understand the pains of parturition?

  96. மலடி அறிவாளா பிள்ளை அருமை?
    Does the barren woman know the endearments of children?

  97. மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
    If the barren woman be asked to bring forth a child, will she do so?

  98. மலரில் மணமும், எள்ளில் எண்ணையும், உடலில் உயிரும், கலந்தது போல.
    All pervading, like fragrance in a flower, oil in sesamum seed, and life in the body.

  99. மலிந்த பண்டம் கடையிலே வரும்.
    When commodities are abundant, they come to market.

  100. மலை அத்தனை சுவாமிக்குத் தினை அத்தனை புஷ்பம்.
    A flower, as small as a millet-seed, is dedicated to an idol as large as a mountain.

  101. மலை அத்தனை சுவாமிக்குத் மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?
    Do they dedicate flowers as large as mountains, to idols as large as monntains?

  102. மலை இலக்கானால் குருடனும் எய்வான்.
    If a mountain be the target, even a blind man may shoot.

  103. மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.
    It is difficult to roll a stone to the top of a hill.

  104. மலை ஏறினாலும் மைத்துனனைக் கைவிடாதே.
    Though you ascend the mountains, do not leave behind your brother-in-law, or the son of your maternal uncle.

  105. மலைத்தேன் முடவனுக்கு வருமா?
    Will mountain honey come to the lame man?

  106. மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?
    Who created the affinity between the mountain nelli fruit, and sea-salt?

  107. மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின்குடுமிக்கு அழுகிறாளாம்.
    It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.

  108. மலைபோல வந்த்தெல்லாம் பனிபோல நீங்கும்
    All that has come upon thee like mountains, shall pass away as dew.

  109. மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.
    As a mountain amidst thunder brought forth a mouse.

  110. மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?
    Can the wild hog rush on these who are on the mountain top?

  111. மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.
    Although produced on the mountains, the rice must be prepared for use in a mortar.

  112. மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?
    When a mountain becomes a sod, what will the sod be like?

  113. மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.
    Should a mountain fall, the head must bear it.

  114. மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.
    Like excavating a mountain and catching a rat.

  115. மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?
    After having chased and beaten him round a mountain, will it be difficult to do so round a bush?

  116. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
    Is not a small chisel sufficient to perforate a rock?

  117. மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.
    As if an adze and chisel came to perforate the rock.

  118. மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?
    If a dog bark at a mountain, will the mountain be injured or the dog?

  119. மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
    A rock supports a rock, can a sod do so?

  120. மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?
    Will a door be a difficulty to my aunt who has swallowed a mountain?

  121. மலை விழுங்குதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
    Is a sod used as a chutney, to swallow a mountain?

  122. மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேலே.
    When one spits lying on his back, the spittle will fall on his breast.

  123. மவுனம் மலையைச் சாதிக்கும்.
    Silence may defy a mountain.

  124. மவ் இடப் பவ் ஆயிற்று.
    ம being elided, ப has appeared.

  125. மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?
    Even in the darkness of the rainy season, will a monkey when leaping, miss the branch?

  126. மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?
    Who draws and pours water into the clouds?

  127. மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?
    Can you put up a hurdle to keep out the rain?

  128. மழைக்கோ படல், இடிக்கோ படல்?
    Is the hurdle to keep out rain, or the thunderbolt?

  129. மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையுமா?
    Can that be filled with a watering pot which cannot be filled by the rain?

  130. மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.
    Vegetation without rain, a child without a mother.

  131. மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.
    Even Mahadéva does not know when it will rain, nor when a child will be born.

  132. மழை விட்டும் தூவானம் விட இல்லை.
    Though the rain has ceased, the drizzling has not.

  133. மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.
    An article forgotten is not good even for one’s children.

  134. மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?
    If one say, I died through forgetfulness, will life return?

  135. மனக்கசடு அற மாயை நாடேல்.
    Seek not empty pleasures to purify the heart.

  136. மனக் கவலை பலக் குறைவு.
    Mental anxiety will diminish one’s strength.

  137. மனச்சாட்சி குற்றுமேல் மறுசாட்சி வேண்டாம்.
    If the conscience condemn, other evidence is unnecessary.

  138. மனதிலே பகை உதட்டிலே உறவு.
    Enmity at heart, friendship on the lips.

  139. மனதில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.
    A secret that should be concealed in the mind is uttered by a fool.

  140. மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.
    The heart is its own witness, God is the witness of the rest.

  141. மனது அறியாப் பொய் உண்டா?
    Can a mind be ignorant of its own falsehood?

  142. மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.
    He who utters prayers daily has no anxiety of mind.

  143. மனம் கொண்டது மாளிகை.
    That which is agreeable to the mind is a palace.

  144. மனம் தடுமாறேல்.
    Be not confused.

  145. மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.
    Although willing he will lack means.

  146. மனிதர் காணும் பொழுது மவுனம், இராதபொழுதில் உருத்திராக்ஷப்பூனை.
    Silent in the presence of men, in their absence a beaded cat.

  147. மனிதன் மறப்பான், குறைபடுவான், மாறுவான், போவான்.
    Man forgets, is reduced in circumstances, changes and vanishes.

  148. மனுஷன் தலையை மான் தலை ஆக்குகிறான் மான் தலையை மனுஷன் தலை ஆக்குகிறான்.
    He can transform a man’s head into the head of a deer, and he can make a man’s head out of a deer’s head.

  149. மனையாள் விடியுமுன் எழுந்து வீட்டுப் பண் செய்வாள்.
    A wife gets up before day-break and looks after her domestic affairs.

  150. மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம், மாற்றானை ஒரு நாளும் நம்பவேண்டாம்.
    Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.

  151. மனோ வியாதிக்கு மருந்து உண்டா?
    Is there any remedy for mental sickness?

  152. மன்னவர்கள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.
    Kings have perished, their prime ministers have perished, and all who lived before, are dead.

  153. மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.
    The government of kings depends on the vigor of their councillors.

  154. மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.
    A sceptre of justice is the beauty of a king.