Tamil Proverbs
translated by Peter Percival
மு
3768006Tamil Proverbs — முPeter Percival

மு.

  1. முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா?
    Will the distortion of the countenance be removed by looking into a mirror?

  2. முகத்துக்கு முகம் கண்ணாடி.
    One face is a mirror to another face.

  3. முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.
    If a woman elope with her husband’s elder brother out of personal regard for him, it will be a disgrace to the whole family.

  4. முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?
    If the face be ugly, what can the mirror do?

  5. முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விஷம்.
    A face like the moon, a mind of deadly poison.

  6. முக்காட்டுக்குள் சமுதாடா?
    What! a dagger under a veil?

  7. முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?
    What, is it to make signs under a veil?

  8. முக்காதம் சுமந்தாலும் முசல் கைக்தூக்குத்தான்.
    Though carried thirty miles, a hare is carried in the hand.

  9. முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகாது.
    Though a crew bathe three times a day, it will not thereby become a white crane.

  10. முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?
    Will a crow by bathing three times a day become a crane?

  11. முக்கூட்டுச் சிக்கு அறாது.
    A triparty business is always involved.

  12. முசலை எழுப்பி விட்டு, நாய் பதுங்கினதுபோல.
    Like a dog crouching after starting a hare.

  13. முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.
    Crooked grass prevents the flow of six kalams of water.

  14. முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.
    A lame man is very boisterous before a cripple.

  15. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.
    As a lame man longed for the honey that hung from a branch.

  16. முடவன் சந்தைக்குப் போனாற்போல.
    Like a lame man going to market.

  17. முடிக்காதவனே படிக்காதவன்.
    He who does not accomplish his object lacks training.

  18. முடிச்சுப் போனதும் அல்லாமல் இளித்தவாய்ப்பட்டமும் கூடக் கிடைத்தது.
    You have not only lost the bundle of money, but also incurred a reproachful name.

  19. முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?
    If you plant bundles, will heaps be produced?

  20. முடியும் வகை யோசியாமல் முயற்சி கொள்ளாதே.
    Never undertake a matter without due consideration as to how it is to be accomplished.

  21. முடி வைத்த தலைக்குச் சுழிசுத்தம் பார்க்கிறது, கொண்டு குலம் பேசுகிறதுபோல் இருக்கிறது.
    Examining the circlets of hair in a crowned head, is like discussing the tribe of a girl after marrying her.

  22. முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை, முழுதும் கெட்டவனுக்குத் துக்கம் இல்லை.
    When completely drenched one does not feel wet, when entirely ruined one feels no sorrow.

  23. முட்டரோடாடிய நட்புக் கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.
    Friendship with the rude is like the foot of a traveller among stumps of ebony.

  24. முட்டற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா?
    What double dower to a worthless woman?

  25. முட்டாளுக்கு இரண்டு ஆள்.
    Two persons for one fool.

  26. முட்டாளுக்குக் கோபம் மூக்கின்மேலே.
    The wrath of a fool is on his nose.

  27. முட்டிகைபோல முனியாது வைகலும், கொட்டி உண்டாகும் குறடுபோற் கைவிடுவார்.
    Even those who like a pair of pincers uphold their dependants and daily feed them, will leave them like a pair of tongs.

  28. முட்டி ஊட்டின கன்று முதர்க் கன்று.
    A calf that drains the udder is almost weaned.

  29. முட்டுக்கு முட்டல்ல மூடக் கதவும் அல்ல, சன்னிதிவாசலுக்குச் சார்த்தக் கதவும் அல்ல.
    It is neither an obstruction, nor a door to shut, nor even a screen to the temple gateway.

  30. முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன?
    If victory comes by being pressed with want, what matters a cuff on the head?

  31. முதலில் எடுத்துச் செலவிடாதே.
    Do not spend on your capital.

  32. முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி.
    Clever at the beginning, indolent at the end.

  33. முதலுக்கு மோசமாக இருக்கிறது இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?
    When the principal is in danger, do you quarrel about the interest?

  34. முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.
    Already weak, and withal pregnant.

  35. முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.
    A crocodile cares not whether the water is deep or shallow.

  36. முதலை தன் இடத்து, மலை ஒத்த ஆனையையும் இழுத்துச் செல்லும்.
    In his own element, the alligator will carry off an elephant as big as a mountain.

  37. முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப்போல.
    Like merchants who do not increase the capital they invest.

  38. முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்ப்பில்லார்க்கு நிலை இல்லை.
    Those who have no capital have no gain, those who have no sons to lean on, have no support.

  39. முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.
    Those not possessed of capital, have no gains.

  40. முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.
    When the funeral procession was moving forward, the tomtom beater died.

  41. முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?
    What, dim-sighted at the beginning of the Alphabet?

  42. முதற் கோணல் முற்றும் கோணல்.
    If crooked at first, it will be so throughout.

  43. முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.
    If one has a wound on his back, he will fear to pass under a bush.

  44. முத்தால் நத்தை பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
    A snail is precious by reason of its pearl, fools have naught wherewith to attain greatness.

  45. முத்திலும் சொத்தை உண்டு, பவழத்திலும் பழுது உண்டு.
    Flaws may be found in pearls and also in coral.

  46. முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.
    It is said that the ears which came first, were covered by the horns which sprung up afterwards.

  47. முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.
    The first shall be last, and the last first.

  48. முந்தின சோத்தைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும்.
    If the first food be rejected, worse may be offered.

  49. முந்நாழி கறக்கிற பசுவானாலும் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.
    Though a cow yields three measures of milk, it is not desirable if it pulls down the roof.

  50. முப்பதிலே மூர்க்கம், நாற்பதிலே நாகரீகம்.
    Obstinacy at thirty, civility at forty.

  51. முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
    Though one may give thirty fanams, the nickname, crop-eared, will not be removed.

  52. முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.
    He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.

  53. முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.
    To the woman adorned with three jewels, the ear ornament is the only want.

  54. முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை.
    None ever continued to prosper or decay for thirty years.

  55. முப்பொருள் ஆதி மூலமானவன்.
    He is the triad who is the first and the last of all.

  56. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
    The industrious will never be put to shame.

  57. முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.
    A stubborn wife, a mat rolled up.

  58. முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா?
    What if the murukku tree grow large, will it do for a pillar?

  59. முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?
    Will the mention of the murungai fruit affect a prescribed diet?

  60. முலைகொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள் சீதேவி.
    The one that nursed and brought up the child is Múdévi, the wife is Shridévi.

  61. முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?
    Is the pain in the breast of the nurse, known to the suckling?

  62. முழங்கையிற் பட்ட சுகம்போல.
    Like the pleasure experienced when the elbow is struck.

  63. முழுகி முப்பது நாளாச்சு, இறங்கி உப்பு அள்ளக்கூட இல்லை என்கிறான்.
    It is thirty days since he bathed, and he says that he is so clean that touching salt would defile him.

  64. முழுக் கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக் கட்டி விட்டது போல.
    Like arming a hog in the snout with a ploughshare, that can tare up the ground without it.

  65. முழுச் சோம்பேறி முள்ளு உள்ள வேலி.
    A perfect sluggard is like a hedge of thorns.

  66. முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.
    He whose share is only one three hundred and twentieth part, is more persistent than he who has a whole one.

  67. முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப் போல.
    Like attempting to conceal a whole pumpkin in a plate of rice.

  68. முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமோ?
    Does a gemmed ferrule require an ornamental rim?

  69. முளைத்த மயிர் மூன்று அதிலும் இரண்டு புழுவெட்டு.
    His beard consists of three hairs, of which two are rotten at the root.

  70. முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாரிகொண்டு வெட்ட வேண்டும்.
    That which was not nipped in the bud will have to be felled with an axe when matured.

  71. முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.
    Thorns are extracted by thorns.

  72. முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.
    By nature the thorn is sharp, and the tulasi fragrant.

  73. முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?
    Who sharpens the point of a thorn?

  74. முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
    If a cloth be spread on a thorn bush, it must be taken off with great care.

  75. முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.
    Though one may endure being struck with a sieve, he cannot endure being brow-beaten.

  76. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
    What is done in the forenoon will result in good or evil in the afternoon.

  77. முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
    Do those who are drenched complain of being wet?

  78. முனைமுகத்து நில்லேல்.
    Do not stand in the face of a battle.

  79. முன் அளந்த நாழி பின் அளங்கும்.
    The same measure that was used before, must be used afterwards.

  80. முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.
    Do not say one thing and do another.

  81. முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
    If the fore-arm be stretched, the elbow will be so also.

  82. முன் கோபம் பின் இரக்கம்.
    Anger first, and pity afterwards.

  83. முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?
    Having given one the lead, will you follow and cut his throat?

  84. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
    If the eternal be with you, will anything be impossible?

  85. முன்னேபோனால் கடிக்கிறது பின்னேபோனால் உதைக்கிறது.
    Biting before, and kicking behind.

  86. முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.
    Look before, look behind, look at yourself, look at me.

  87. முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.
    When you go before you are guilty of infanticide, when you follow you are guilty of brahmanicide.

  88. முன்னேரம் கப்பற்காரன் பின்னேரம் பிச்சைக்காரன்.
    In the forenoon a ship owner, in the afternoon a beggar.

  89. முன்னே வந்த காதைப்பார்க்கிலும் பின்னே வந்த கொம்பு பலம்.
    The horn that came after, is stronger than the ear that came before.